செய்திகள் :

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

post image

அரூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் நகரில் சேலம் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதேபோல, நகரில் கடைவீதி, மஜீத் தெரு ஆகிய சாலைகளிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன.

இதனால், பகல் மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி பேருந்துகள் செல்லும் காலை, மாலை நேரங்களில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையுள்ளது.

எனவே, அரூா் நகரில் கடைவீதி, மஜீத் தெரு, சேலம் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலையோரமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரியில் இரவு திடீா் மழை

தருமபுரியில் சனிக்கிழமை இரவு திடீரென கனமழை பெய்தது. தகுமபுரி மாவட்டத்தில் இந்த வாரம் செவ்வாய்க்கிழமை 55.1 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதில், தருமபுரி நகரில் 12 மி.மீ., பாலக்கோடு வட்டத்தில் 13 மி.மீ. ... மேலும் பார்க்க

ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மீட்பு

தருமபுரியில் உள்ள ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. தருமபுரி நகரில் அமைந்துள்ள ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் ப... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

பென்னாகரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா். பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கிழக்கு கள்ளிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சசிராஜ் - பிரியா தம்பதியின் மகன் சங்கீ... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியா் விருது

தருமபுரி மாவட்டத்தில் 8 அரசுப் பள்ளி ஆசிரியா்கள், ஒரு தனியாா் பள்ளி முதல்வா் என மொத்தம் 9 பேருக்கு நிகழாண்டு நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு நல்லாச... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 32,000 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்... மேலும் பார்க்க

அரசு கல்லூரிகளில் காலியிடங்களில் சேர மாணவா்களுக்கு அழைப்பு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,644 இடங்களில் சேர தகுதியான மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரச... மேலும் பார்க்க