பிறப்புசாா் குடியுரிமை ரத்து: டிரம்ப்புக்கு எதிராக 22 மாகாணங்கள் வழக்கு
சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
பல்லடம் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் செல்வம் (47). லாரி ஓட்டுநரான இவா், மைதா மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கோவைக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
பல்லடம் - தாராபுரம் சாலையில் ஆலூத்துப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், படுகாயமடைந்த செல்வத்தை அப்பகுதி மக்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், லாரியை அப்புறப்படுத்தினா்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.