செய்திகள் :

``சாலை ஓரத்தில் அல்ல; பட்டா நிலத்தில் மட்டுமே கட்சி கொடி கம்பங்கள்'' - குமரியை பின்பற்றுமா தமிழகம்?

post image

தமிழ்நாடு முழுவதும் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்கள், சாதி கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கதிரவன் என்பவர் வழக்கு தொடரர்ந்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'அரசின் இடத்தை தங்கள் அரசியல் லாபத்துக்காக கட்சிகள் பயன்படுத்துவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டுமா?' என கேள்வி எழுப்பியதுடன் மனுவை தள்ளுபடி செய்தது.

சாலை ஓரங்களில் கொடிக்கம்பங்களை அகற்றும் விஷயத்தில் ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிறது. அதே சமயம் 6 ஆண்டுகளுக்கு முன்பே கன்னியாகுமரி மாவட்டத்தில் கொடிகம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. இப்போது சாலை ஓரங்களில் உள்ள அரசு நிலங்களில் கட்சி கொடிகம்பங்கள் இல்லாத நிலைதான் உள்ளது.

கொடிகம்பங்கள் அமைக்க வேண்டும் என்ற ஆசை உள்ள அரசியல் கட்சிகள் சாலை ஓரங்களில் உள்ள தங்கள் கட்சியினருக்கு சொந்தமான நிலத்திலோ, அல்லது கட்சியினரின் வீட்டுக்கு முன்பு உள்ள பட்டா நிலத்திலோதான் அமைக்கின்றனர்.

நாகர்கோவில் மாநகராட்சி முன்னாள் கமிஷனர் சரவணகுமார் மற்றும் முன்னாள் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர்தான் 2019-ம் ஆண்டே கொடிகம்பங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதற்கு அரசியல் கட்சியினரும் ஒத்துழைப்பு நல்கினர். அதைத்தொடர்ந்தே சாலை ஓரங்களில் கொடிகம்பங்கள் முற்றிலும் அகற்றப்பட்டன.

ஜாண் விக்டர்தாஸ்

இதுகுறித்து நாகர்கோவிலைச் சேர்ந்த ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்க தலைவர் ஜாண் விக்டர்தாஸ் கூறுகையில், "தமிழ்நாட்டில் சாலை ஓரங்களில் அரசு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என கோர்ட் வழிகாட்டி வருகிறது. அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் கட்சியினர் கருத்து கூறி வருகின்றனர். அதே சமயம் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிகம்பங்களும் அகற்றப்படுவிட்டன.

நாகர்கோவில் மாகராட்சி கமிஷனராக சரவணகுமார் இருந்தபோது 2019-ம் ஆண்டு நகரில் இருந்த அனைத்து கொடிகம்பங்களையும் அகற்ற நடவடிக்கை எடுத்தார். அதுபோன்று மக்களுக்கு இடையூறாக பிளக்ஸ் போர்டுகளும் வைக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.

நாகர்கோவில் மாநகராட்சி முன்னாள் ஆணையாளர் சரவணகுமார்

அதைத்தொடர்ந்து அன்றைய கலெக்டர் பிரசாந்த் வடநேரே கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்டார். எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் அதிகாரிகள் பேசி புரியவைத்தனர்.

அரசியல் கட்சியினரும் மக்கள் நலனுக்காக அதை ஏற்றுக்கொண்டனர். அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சியினர் சாலை ஓரத்தில் உள்ள தங்களது பட்டா நிலத்தில் கொடிகம்பங்கள் அமைத்து வருகின்றனர்.

வீடுக்கு முன் பட்டா நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிகம்பம்

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கொடிகம்பங்களை அகற்ற முன்மாதிரியாக செயல்பட்ட அதிகாரிகளை இன்றளவும் குமரி மக்கள் பாராட்டுகிறார்கள். நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை முன் மாதிரியாகக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் சாலை ஓரங்களில் உள்ள கொடிகம்பங்கள் அகற்றப்பட்டால் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் இருக்கும்" என்றார்.

``வயது முதிர்வால் அல்ல; துறை உச்சத்தில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளார் விஜய்'' - TVK ஆனந்த்

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைமை சார்பில் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் மஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெ... மேலும் பார்க்க

``ஜக்தீப் தன்கர் எங்கே இருக்கிறார்? நான் FIR பதிவு செய்வது அழகல்ல'' - எம்.பி கபில் சிபல்

முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கரின் திடீர் பதவி விலகலுக்கு பின்னர் அவரது இருப்பிடம் குறித்து எம்.பி. கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ’... மேலும் பார்க்க

``வ.உ.சி-யின் சுதேசி கனவை நிறைவேற்றி வருகிறார் பிரதமர் மோடி'' - எல்.முருகன்

இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 -ம் தேதியன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வலியுறுத்தி பா‌.ஜ.க சார்பில் நாடு முழுவதும் 'ஹர் கர் திரங்கா' என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு ... மேலும் பார்க்க

Moringa Leaves: தலைமுடி உதிர்தல் முதல் மூட்டுவலி வரை சரியாக்கும் முருங்கைக்கீரை!

சிக்குரு, கிரஞ்சம், கிழவீ, சோபாஞ்சனம் எனப் பல பெயர்களைக் கொண்ட முருங்கை மரத்தை ‘கற்பக விருட்சம்’ என்று சொல்லலாம். இதன் இலை (கீரை), காம்பு, பூ, காய், பிசின், பட்டை என அனைத்துப் பாகங்களும் மருத்துவக் கு... மேலும் பார்க்க

``திராவிட மாடல் 2.0; நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்'' - மு.க.ஸ்டாலின்

தாம்பரத்தில் இன்று மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திறப்பு விழா மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழாவில் கலந்துகொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். பட்டா வழங்கும் விழாவில்... மேலும் பார்க்க

Doctor Vikatan: திடீரென ஆரம்பித்திருக்கும் தூக்கமின்மை பிரச்னை; தொடருமா, சரியாகிவிடுமா?

Doctor Vikatan: என் வயது 47. எனக்கு கடந்த 2-3 வாரங்களாகவே சரியான தூக்கமில்லை. வாரத்தில் ஒன்றிரண்டு நாள்கள்தூக்கமின்மையால் மிகவும் அவதிப்படுகிறேன். இன்று பலரும் தூக்கமின்மையால் அவதிப்படுவதைக் கேள்விப்ப... மேலும் பார்க்க