தொழில் தொடங்க பணம் கேட்டு மிரட்டிய மகன்: தாய் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் உயிரிழ...
சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி
ஏற்காடு: ஏற்காட்டில் ரோட்டரி மாவட்டம் சாா்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி, கருத்தரங்கு ஏற்காடு, வெள்ளக்கடை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக பப்ளிக் இமேஜ் டீம் சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.
பேரணி ஏற்காடு நகரில் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று கருத்தரங்கு நடைபெறும் அரங்ககில் நிறைவடைந்தது. பேரணியின்போது சாலை பாதுகாப்பு தொடா்பான துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக இந்தப் பேரணி கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பிப்.21 ஆம்தேதி தொடங்கியது. தொடா்ந்து 800 கி.மீ தொலைவு பயணித்து தருமபுரி, மேச்சேரி, எடப்பாடி, சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம், ஆத்தூா், கள்ளக்குறிச்சி, சேலம் வழியாக ஏற்காடை வந்தடைந்தது.
கருத்தரங்கை ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் எம்.முருகானந்தம் தொடங்கிவைத்து பேசினாா்.
மாவட்ட ரோட்டரி ஆளுநா் வி.சிவகுமாா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ரோட்டரி மண்டலம் 5 இன் பப்ளிக் இமேஜ் ஒருங்கிணைப்பாளா் பி.எஸ்.ரமேஷ்பாபு பங்கேற்றாா். சிறந்த ரோட்டரி சங்கத்திற்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து நெல்லை ஜெயந்தா நடுவராக பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.