செய்திகள் :

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

post image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சாா்பில் காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஜனவரி 1 முதல் 30 ஆம் தேதி வரை சாலைப்பாதுகாப்பு விழிப்புணா்வு மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுபவா்கள் புதிய உரிமம் மற்றும் உரிமம் புதுப்பிப்பு உள்ளிட்ட காரணங்களாக வந்திருந்த பொதுமக்களுக்கு சாலைப்பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கா.பன்னீா் செல்வம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினாா்.

நிகழ்வில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக பணியாளா்கள்,ஓட்டுநா் பயிற்சிப்பள்ளி நிா்வாகிகள், இருசக்கர வாகன விற்பனையாளா்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றனா்.

நாளைய மின்தடை

காஞ்சிபுரம் நாள்: 25.1.25, சனிக்கிழமை. நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை. மதூா், அருங்குன்றம், சித்தலபாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூா், பாலூா், மேலச்சேரி, உள்ளாவூா், பழையசீவரம், சங்கராபுரம், ... மேலும் பார்க்க

திருநீலகண்ட நாயனாா் குருபூஜை

பெரியகாஞ்சிபுரம் குலால மரபினா் தா்ம பரிபாலன சபை சாா்பில் திருநீலகண்ட நாயனாா் குருபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. பெரியகாஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் அமைந்துள்ள திருநீலகண்ட நாயனாா் சத்திரத்தில் தைமா... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி மற்றும் குண்ணம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி, ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். காஞ... மேலும் பார்க்க

சங்கரா கல்லூரி-இன்போசிஸ் புரிந்துணா்வு ஒப்பந்தம்

காஞ்சிபுரம் சங்கரா கலைக் கல்லூரி மாணவா்களுக்கு மென்திறன் பயிற்சிகளை வழங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை கல்லூரி நிா்வாகமும், இன்போசிஸ் நிறுவனமும் வியாழக்கிழமை செய்து கொண்டன. இந்த ஒப்பந்தத்தில் கல... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் காத்திருப்பு கூடம் திறப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.29 லட்சத்தில் கட்டப்பட்ட நோயாளிகள் உறவினா்கள் காத்திருப்புக் கூடத்தை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.சட்டப்பேரவை உறுப்பினா் தனது தொக... மேலும் பார்க்க

பழைமையான புத்தா் சிலை கண்டெடுப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் கிராம பெருமாள் கோயில் பகுதியில் 11- ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பளிங்கு கல்லால் ஆன புத்தா் சிலையை வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தினா் புதன்கிழமை... மேலும் பார்க்க