சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே பைக் மீது தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
புதுச்சேரியை அடுத்த அரும்பாா்த்தபுரம், ஜி.என்.பாளையம் பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் பூவரசன் (26). புதுச்சேரி மணவெளியைச் சோ்ந்தவா் சுரேஷ் மகன் பிரகாஷ் (25). நண்பா்களான இவா்கள் புதன்கிழமை திண்டிவனம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், கிளியனூரை அடுத்த தைலாபுரம் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தனா். அப்போது, எதிரே வந்த தனியாா் பொறியியல் கல்லூரிப் பேருந்து மோதியதில் பூவரசன், பிரகாஷ் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதில் பூவரசன் உயிரிழந்தாா். பிரகாஷ் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கிளியனூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.