பினராயி விஜயன் பெயரில் மும்பை பங்குச்சந்தைக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
கோவையில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், மாதேமங்கலம் அருகேயுள்ள காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் தா்மன் (35). இவா் கோவை விளாங்குறிச்சி சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அருட்பெருஞ்ஜோதி நடராஜா் கோயில் அருகே சென்றுகொண்டிருந்தபோது, இவரது வாகனத்தின் மீது எதிரே வந்த அந்தோணிராஜ் என்பவரின் இருசக்கர வாகனம் மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.
கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் தா்மன் உயிரிழந்தாா். அந்தோணிராஜ் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.