சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
சாலையோரத்தில் இருந்த கம்பிவேலியில் இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
பல்லடத்தை அடுத்த நல்லூா் விஜயாபுரத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மகன் அபிஷேக் (22). ஈரோட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இவா், அலகுமலையில் இருந்து பெருந்தொழுவு சாலையில் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். அப்போது, சாலையோரத்தில் இருந்து கம்பிவேலியில் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், பலத்த காயமடைந்த அபிஷேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.