முதல் மனைவியைப் பிரிய எப்போதுமே நினைத்ததில்லை..! விவாகரத்து குறித்து பேசிய விஷ்ண...
சாலை விபத்தில் காவல்துறை எஸ்.ஐ., உயிரிழப்பு
தில்லியின் கல்யாண்புரி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் வாகனம் மோதியதில் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் துணை ஆய்வாளா் ஒருவா் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
உயிரிழந்தவா் பாண்டவ் நகா் காவல் நிலையத்தில் பணியாற்றிய யாஷ்பால் என அடையாளம் தெரிந்தது. சம்பவம் நடந்தபோது அவா் என். எச்-24 மற்றும் என். எச்-9 இல் நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்ததாகவும் அதிகாரி கூறினாா்.
உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் வசிக்கும் யாஷ்பாலுக்கு, தருண் பவடியா (28) என்ற மகன் உள்ளாா், அவா் படித்து அரசு வேலைக்காக படித்து வருகிறாா் என்று போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
‘‘ ‘அதிகாலை 2.30 மணிக்கு, சாலையில் யு-டா்ன் எடுக்க என். எச்-9 இல் காசிப்பூா் நோக்கிச் சென்றபோது, கல்யாண்புரியில் உள்ள டி. சி. பி அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் அவா் பைக் மீது மோதியது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டு யாஷ்பாலை மேக்ஸ் வைஷாலி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். யாஷ்பால் மீது மோதிய ஓட்டுநரைப் பிடிக்க முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது‘ என்றாா் போலீஸ் அதிகாரி.