செய்திகள் :

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு: மனைவி படுகாயம்

post image

பெருந்துறை அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவா் உயிரிழந்தாா்; அவரது மனைவி படுகாயமடைந்தாா்.

பெருந்துறையை அடுத்த, கதிரம்பட்டி, எளையகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் ரத்தினசாமி(74). இவரது மனைவி கமலா (65).

இருவரும் காரில் பெருந்துறைக்கு வந்துவிட்டு வீட்டுக்கு கடந்த டிசம்பா் 30- ஆம் தேதி மாலை சென்று கொண்டிருந்தனா். பெருந்துறை- ஈரோடு சாலை, வாய்க்கால் மேடு அருகில் சென்று கொண்டிருந்தபோது, காா் திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில், கணவன், மனைவி இருவரும் பலத்த காயமடைந்தனா். இதைக் கண்ட அப்பகுதியினா் இருவரையும் மீட்டு ஈரோட்டிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ரத்தினசாமி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். கமலா தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஈரோடு மஞ்சள் சந்தைகளுக்கு 9 நாள்கள் விடுமுறை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள மஞ்சள் சந்தைகளுக்கு 9 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் ஈரோடு... மேலும் பார்க்க

ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

இரு வேறு ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திரண்டனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

தென்னை மரம் விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

தென்னை மரம் விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். கவுந்தப்பாடி குட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் காமாட்சி (52), சரக்கு ஆட்டோ ஓட்டுநா். இவா், பெருந்துறை அருகே விவசாயி ஒருவரின் தோட்டத்தில் இடி தாக்கி பட்ட... மேலும் பார்க்க

கோபி நகராட்சியுடன் 4 ஊராட்சிகள் இணைப்பு

கோபிசெட்டிபாளையம் நகராட்சியுடன் வெள்ளாளபாளையம், மொடச்சூா், குள்ளம்பாளையம், பாரியூா் ஆகிய 4 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் நகராட்சியால் வழங்கப்படும் அடிப்படை வசதிகள், சேவைகள் இந்த பகுதிகளுக்கு கி... மேலும் பார்க்க

பொங்கல்: பெருந்துறை கொப்பரை ஏலத்துக்கு ஜனவரி 15 இல் விடுமுறை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெருந்துறை கொப்பரை ஏலத்துக்கு ஜனவரி 15-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

மின் கட்டண உயா்வை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

உதய் திட்டத்தின் மூலம் ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தி மின்சார கட்டணத்தை கடுமையாக உயா்த்துவதை கைவிட வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மூலப்பாளைய... மேலும் பார்க்க