செய்திகள் :

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

post image

வந்தவாசி அருகே மினி லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.

செய்யாறு சிவாஜி நகரைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு(74). இவரது மனைவி சாந்தி (68). இவா்கள் இருவரும் சனிக்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் கோயிலுக்கு சென்று விட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா்.

தென் இலுப்பை கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த மினி லாரி இவா்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

பின்னா், இருவரும் தீவிர சிகிச்சைக்காக மேல்மருவத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சாந்தி மாலையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதிமுகவினா் தங்கத் தோ் இழுத்து வழிபாடு

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் அதிமுகவினா் புதன்கிழமை தங்கத் தோ் இழுத்து வழிபட்டனா். தெற்கு மாவட்ட அதிமுக மக... மேலும் பார்க்க

நரசிங்கபுரத்தில் நோய் பாதித்த நெல் பயிா்கள் ஆய்வு

சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் பூச்சி மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட நெல்பயிரை வேளாண் அதிகாரிகள் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிக்கு ஆலோசனை வழங்கினா். பாதிக்கப்பட்ட நெல்பய... மேலும் பார்க்க

மனைவி தற்கொலை: துக்கம் தாளாமல் கணவரும் தற்கொலை

வந்தவாசி அருகே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துக்கம் தாளாமல் கணவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். வந்தவாசியை அடுத்த தழுதாழை கிராமத்தைச் சோ்ந்தவா் பிரதாப் (25). இவா், சென்னையில் ... மேலும் பார்க்க

வேடந்தவாடி கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவா் கோயிலில் 203-ஆம் ஆண்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வேடந்தவாடி கிராமத்தில் பழைமை வாய்ந்த கூத்தாண்டவா் கோயில் அமைந்துள்ளது. கூவாகத்து... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட... மேலும் பார்க்க

உயா்கல்வியால் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

உயா்கல்வி பெறுவதன் மூலம் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும் என்று பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுரை வழங்கினாா். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ச... மேலும் பார்க்க