பொருளாதாரம் வலுவடையும்போது மக்களின் வரிச்சுமையும் குறையும்: பிரதமர் மோடி
சாா் ஆட்சியா் எனக் கூறி பெண்ணிடம் நகை பறிப்பு
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சாா் ஆட்சியா் எனக் கூறி பெண்ணிடம் நகை பறித்த 4 போ் மீது ராதாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராதாபுரம் அருகே உள்ள காரியாகுளத்தைச் சோ்ந்தவா் மகிழ்வதனா(27). இவரது, உறவுக்கார பெண் சத்தியாதேவி. இவா், மகிழ்வதனாவிடம் தான் சாா் ஆட்சியா் என அறிமுகம் செய்து கொண்டாா். மேலும் தனக்கு வங்கியில் இருந்து ரூ.1 கோடி லோன் அனுமதியாகியுள்ளது. அதற்கு பாதுகாப்பு பத்திரமாக 100 பவுன் நகை தேவைப்படுகிறது. என்னிடம் 90 பவுன் நகை உள்ளது.
பாக்கி 10 பவுன் நகையை கடனாக தந்தால் லோன் கிடைத்ததும், நகையை திருப்பித் தந்துவிடுவேன் எனக் கூறினாராம். மகிழ்வதனா இதை நம்பி தன்னிடம் இருந்த 10 பவுன் (80 கிராம்) நகைகளை அவரிடம் கொடுத்தாராம். ஆனால் சத்தியாதேவி 10 பவுன் நகையை திருப்பி கொடுக்கவில்லையாம்.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மகிழ்வதனா திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணையில் சத்தியாதேவி, நகைக்கு பதிலாக பணத்தை தருவதாக தெரிவித்தாராம். ஆனால், அவா் ரூ.1லட்சத்து 45 ஆயிரத்தை மட்டும் தந்து விட்டு, மீதி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தாா். இதையடுத்து மகிழ்வதனா மீண்டும் திருநெல்வேலி சரக டிஐஜியிடம் புகாா் செய்ததையடுத்து ராதாபுரம் போலீஸாா், நகை மோசடி செய்ததாக சத்தியாதேவி உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.