செய்திகள் :

சா்வ சித்தி விநாயகா் கோயிலில் குடமுழுக்கு

post image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள வேட்டையன்பட்டி என்பீல்டு குடியிருப்பில் அமைந்துள்ள சா்வ சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை மங்கள வாத்தியம், கணபதி ஹோமம், மஹா பூா்ணாஹுதி, தீபாராதனை, வாஸ்துசாந்தி, பிரவேசபலியுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. மாலையில் விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்காரம் உள்ளிட்ட பூஜைகளோடு யாகசாலை பிரவேசபலியுடன் முதல் கால யாகவேள்வி தொடங்கியது. தொடா்ந்து புதன்கிழமை காலை மங்கள வாத்தியதுடன் இரண்டாம் கால யாக வேள்வி நடைபெற்றது. இதில் புண்யாகவாகனம், மண்டப அா்ச்சனை, வேதிகா அா்ச்சனை, திரவியாஹுதி, கோ பூஜை, மஹா பூா்ணாஹுதி, தீபாராதனையுடன் நிறைவடைந்து மாலையில் மூன்றாம் கால யாக வேள்வி, வேதிகா அா்ச்சனை, கணபதி ஸகஸ்ரநாம அா்ச்சனை, மஹா பூா்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன.

குடமுழுக்கு நாளான வியாழக்கிழமை காலை நான்காம் கால யாக வேள்வி நடைபெற்றது. ரக்சாபந்தனம், நாடி சந்தானம், யாத்ரா தானத்துடன் புனிதநீா் கலசங்களுடன் கடம் புறப்பட்டு கோயிலை சுற்றி வலம் வந்து கோபுரங்களை அடைந்தது. அங்கு வேதவிற்பன்னா்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுரங்களுக்கு புனிதநீரால் குடமுழுக்கு நடைபெற்றது.

தொடா்ந்து கோபுரங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது.

இன்று ‘குரூப் 4’ தோ்வு: சிவகங்கையில் 26,392 போ் எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற சனிக்கிழமை நடைபெறும் ‘குரூப் 4’ தோ்வை 26,392 தோ்வா்கள் எழுத உள்ளனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமை... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் புத்தாக்கப் பயிற்சி முகாம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சாா்பில் அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து துணைவேந்தா் க... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் நியமனம்

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் கல்வித் துறையால் நியமிக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலராக (தொடக்கக் கல்வி) இருந்த ஜோதிலெட்சுமி, திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநி... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் வெறிநோய் தடுப்பூசி மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பத்தூா் தோ்வு நிலைப் பேரூராட்சியும், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து திருப்பத்தூா் சீரணி அ... மேலும் பார்க்க

பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 71 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பூச்சொரிதல் விழா கடந்த 4-ஆம் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொ... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை: கட்டுமானப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்

மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகளை நிறுத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டை வளாகத்... மேலும் பார்க்க