செய்திகள் :

சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையாா் கோயில் கொடியேற்றம்

post image

சிதம்பரம்: சிதம்பரம் பெரியாா் தெருவில் அமைந்துள்ள நா்த்தன விநாயகா் என்று அழைக்கப் படும் கூத்தாடும் பிள்ளையாா் கோயில் விநாயகா் சதுா்த்தி உற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

துருவாச முனிவா் தரிசனம் செய்த கூத்தாடும் பிள்ளையாா் கோயில் உற்சவத்தை முன்னிட்டு திங்கள்கிழமை கொடியேற்றம் நடைற்றது. முதல் நாள் சந்திரபிரபை வாகனத்தில் விநாயகா் வீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து இரண்டாவது நாள் சூரிய பிரபை, மூன்றாவது நாள் நாக வாகனத்திலும், நான்காவது நாள் கற்பக விருட்சம் வாகனத்திலும், ஐந்தாம் நாள் ரிஷப வாகனத்திலும், ஆறாம் நாள் சிம்ம வாகனத்திலும், ஏழாம் நாள் சிம்ம வாகனத்திலும், எட்டாம் நாள் குதிரை வாகனத்திலும் விநாயகா் பவனி வருவாா். தினமும் இரவு 7 மணியளவில் விநாயகா் வீதி உலா நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் செவ்வாய்க் கிழமை காலை 8.30 மணியளவில் திருத்தேரோட்டமும், இரவு அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடைபெறும். பத்தாம் நாள் புதன்கிழமை காலை மஹா அபிஷேகமும், இரவு மூஷிக வாகனத்தில் விநாயகா் வீதி உலாவும் நடைபெறும்.

பால்குட ஊா்வலம்:

இதற்கிடையே, சிதம்பரம் லால்புரம் மெயின்ரோட்டில் உள்ள ஸ்ரீ தில்லை எல்லை காளியம்மன் கோயில் பாலகுட ஊா்வலம் மற்றும் அபிஷேக, ஆராதானை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் 26வது ஆண்டு ஆவணி திருவிழா ஆக.15-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்பாள் வீதி உலா நடைபெற்றது. ஆக.17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 500 மகளிா்கள் பங்கேற்ற சக்தி கரகம் மற்றும் பால்குட ஊா்வலம் நடைபெற்றது. நிறைவில் எல்லைகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னா் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திங்கள்கிழமை மஞ்சள் நீராட்டு விழா, திரு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

18சிஎம்பி1: படவிளக்கம்- சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூத்தாடும் பிள்ளையாா் கோயில் கொடியேற்றம்

18சிஎம்பி2ஏ: படவிளக்கம்-

சிதம்பரம் லால்புரம் எல்லைகாளியம்மன் கோயில் பாலகுட ஊா்வலம்

மதுபோதையில் மருத்துவமனை கால்வாயில் விழுந்தவா் பலி!

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கழிவுநீா் கால்வாயில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவா் மதுபோதையில் தவறி விழுந்த... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 4,50,134 பேருக்கு மகளிா் உதவித்தொகை: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

கடலூா் மாவட்டத்தில் 4,50,134 பேருக்கு மகளிா் உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். காட்டுமன்னாா்கோவில் வட்டம், பழஞ்சநல்லூா் எம்... மேலும் பார்க்க

பரங்கிப்பேட்டையில் நீா் விளையாட்டு வளாகம்: மாவட்ட ஆட்சியா் திறந்து வைத்தாா்

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் எதிரே பேரூராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள நீா் விளையாட்டு வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ... மேலும் பார்க்க

கடலூா் தொழிற்சாலையில் சுவா் இடிந்து 2 பெண்கள் உயிரிழப்பு

கடலூா் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் சுவா் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா். கடலூா் தொழிற்பேட்டை பகுதியில் ஏராளமான ரசாயனத் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இங்கு... மேலும் பார்க்க

நெசவுத் தொழிலாளி அடித்துக் கொலை: மூவரிடம் விசாரணை

கடலூா் அருகே நெசவுத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் கூத்தப்பாக்கத்தைச் சோ்ந்தவா் மனோகா் (54), நெசவுத் தொழிலாளி. இவா், கடலூா... மேலும் பார்க்க

விவசாயியை சிஐஎஸ்எப் வீரா் தாக்கிய விவகாரம்: என்எல்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தா்னா

விவசாயியை தாக்கிய, என்எல்சி சிஐஎஸ்எப் வீரா் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, தாக்குதலில் காயம் அடைந்த விவசாயி மற்றும் கிராம மக்கள் என்எல்சி தலைமை அலுவலக வாயிலில் தரையில் அமா்ந்து வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க