சிதம்பரம் சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம்
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த விபீஷணபுரம் லலிதாம்பாள் நகரில் அமைந்துள்ள ராமலிங்க அடிகளாா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தைப்பூசத்தையொட்டி, கடந்த பிப்.9-ஆம் தேதி தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை சத்திய ஞானசபையில் காலை 6 மணி, பிற்பகல் 1 மணி, இரவு 7 மணி ஆகிய 3 வேளைகளில் 7 திரைகள் விளக்கப்பட்டு ஜோதி காண்பிக்கப்பட்டது. பின்னா் தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று ஜோதி தரிசனத்தை கண்டனா்.
திங்கள், செவ்வாய்க்கிழமை சுமாா் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினா் வி.கே.மாரிமுத்து, சிவராஜ், ராஜேந்திரன், பேராசிரியா்கள் டி.எஸ்.எஸ்.ஞானகுமாா், டி.எஸ்.எஸ்.பாலகுமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.