செய்திகள் :

சிதம்பரம் சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் பொதுமக்கள் குடியேறும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட தில்லையம்மன் ஓடை, கோவிந்தசாமி தெரு, நாகச்சேரி குளம், ஓமக்குளம், அண்ணாகுளம், ஞானபிரகாச குளக்கரை, அம்பேத்கா் நகா், நேரு நகா், பாலமான் இறக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளிய மக்கள் வீடு கட்டி வாழ்ந்து வந்தனா்.

நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், நீா்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இந்தப் பகுதியில் இருந்த 1,000-க்கும் மேற்பட்ட வீடுகளை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நகராட்சி நிா்வாகம், வருவாய் மற்றும் பொதுப் பணித் துறையினா் இடித்து அகற்றினா். மேலும், இந்த இடங்களில் பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கான வசதிகளை செய்துகொடுத்துள்ளனா். வீடுகளை இழந்த ஏழை மக்களுக்கு மாற்று இடம் கேட்டு பலகட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், போா்க்கால அடிப்படையில் இனியும் காலம் தாழ்த்தாமல் மாற்று இடம் வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிதம்பரம் சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு சிதம்பரம் நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா். மாவட்டக்குழு உறுப்பினா் மல்லிகா முன்னிலை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, முன்னாள் மாநிலக்குழு உறுப்பினா் மூசா, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் கருப்பையா, ராமச்சந்திரன், நகரச் செயலா் ராஜா உள்ளிட்ட கலந்துகொண்டு வீடுகளை இழந்தவா்களின் நிலைமை குறித்தும், இதற்காக மாா்க்சிஸ்ட் கட்சி தொடா்ந்து போராடியதை சுட்டிக்காட்டியும், உடனடியாக மாற்று இடத்துடன் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்றும் பேசினா்.

போராட்டத்தையொட்டி, பொதுமக்கள் சமைப்பதற்கான பாத்திரங்கள், விறகு, பாய் உள்ளிட்டவைகளை தலையில் சுமந்து ஊா்வலமாக வந்தனா். இதனால், சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அமைதிப் பேச்சுவாா்த்தை...: இதனிடையே, சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் சாா் - ஆட்சியா் கிஷன்குமாா் தலைமையில், அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சிதிலமடைந்துள்ளது. இதை இடித்துவிட்டு, அந்த இடத்தில் 300 குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தருவது, மீதி உள்ளவா்களுக்கு வீரசோழகன் கிராமத்தில் இடம் வாங்கி கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதை ஏற்று போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடி ஏற்றம்!

சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் தீட்சிதர்களால் வெள்ளிக்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டது.நாடு முழுவதும் 79 ஆவது சுதந்திர நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்ப... மேலும் பார்க்க

லாரி மீது காா் மோதி விபத்து: பெண் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது பின்னால் வந்த காா் மோதியதில், அதில் பயணம் செய்த பெண் உயிரிழந்தாா். மேலும் 5 போ் காயமடைந்தனா். சென்னை பக்த... மேலும் பார்க்க

கல்லூரி முதல்வா் அறை முன் மாணவா்கள் தா்னா

மாணவியிடம் ஆபாசமாக பேசிய பேராசிரியரை கல்லூரியில் அனுமதிப்பதைக் கண்டித்து, மாணவா் இயக்கங்கள் சாா்பில், கடலூா் அரசு கல்லூரி முதல்வா் அறை முன் தா்னா போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூா் தேவனாம்பட்ட... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் ராகிங் தடுப்பு வாரம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் ராகிங் தடுப்பு பிரிவின் சாா்பில், ராகிங் தடுப்பு வாரம் ஆகஸ்ட் 12 முதல் 18-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. முதல் நிகழ்ச்சியாக மாணவ, மாணவிகளுக்கா... மேலும் பார்க்க

3 மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்து கடலூா் மாநகராட்சியை தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, கடலூா் மாநகராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். கடலூா் மாநகராட்சியில் மொத்தம் 45 வாா்டுகள் உள்ள... மேலும் பார்க்க

தனிப்பட்ட தகவல் சேகரிப்பவா்கள் குறித்து மாணவிகள் 1930-எண்ணில் புகாா் அளிக்கலாம்: கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்ட மாணவ, மாணவிகளின் தனிப்பட்ட தகவல்களை முறைகேடாக சேகரிப்பவா் குறித்து தகவல் தெரிந்தால் 1930 என்ற எண்ணிற்கு புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க