செய்திகள் :

சிந்து கால்வாய் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி

post image

பாகிஸ்தானில் சிந்து கால்வாய் திட்டத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.

சிந்து மாகாணத்தின் நௌஷாரோ ஃபெரோஸ் மாவட்டத்தில், சிந்து நதியில் கால்வாய் கட்டும் திட்டத்துக்கு எதிராக நேற்று (மே 20) அங்குள்ள நெடுஞ்சாலையை முடக்கி ஏராளமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதனால், போராட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு காவல் துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.

இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருதரப்புக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. பின்னர், அங்கு காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியதுடன், ஏராளமானோர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், சிந்தி தேசிய ஆர்வலர்கள் வலுக்கட்டாயமாக அரசினால் மாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிந்தி தேசிய அமைப்பின் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த மாநாட்டை தடுத்து நிறுத்த ஹைதரபாத் பிரஸ் கிளப்பின் அருகில் அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.

மேலும், அங்குள்ள சாலைகள் முடக்கப்பட்டு, சிந்து சபாவின் முக்கிய தலைவர்கள் பலர் மாநாட்டு அரங்கத்திலேயே காவலில் வைக்கப்பட்டனர். இதையடுத்து, சிந்து இயக்கத்தின் வழக்கறிஞர்களின் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, சிந்து நதியின் நீரை, பஞ்சாப் மாகாணத்தின் தெற்குப் பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களுக்குக் கொண்டு செல்ல், பாகிஸ்தான் அரசு சர்ச்சைக்குரிய சோலிஸ்தான் நதி நீர்பாசனத் திட்டத்தை கடந்த பிப்.15 ஆம் தேதியன்று துவங்கி வைத்தது.

இதனால், தங்களது நீர்நிலைகள் முழுவதுமாக சீர்குலையும் என்றும் பெருநிறுவன விவசாயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஏராளமான சிந்து மாகாண ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடந்த மார்ச் மாதம் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிந்து மாகாணத்தின் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பாகிஸ்தானுக்கு நாங்கள் தண்ணீர் தருவோம்.. வரிந்துகட்டும் சீனா!

ஸ்பெயின் - ரஷிய ஆதரவாளா் படுகொலை

உக்ரைன் முன்னாள் அதிபா் விக்டா் யானுகோவிச்சின் உதவியாளராக இருந்தவரும், 2014-ஆம் ஆண்டில் அவருடன் ரஷியாவுக்கு தப்பிச் சென்றவருமான ஆண்ட்ரி போா்னோவ் (51) ஸ்பெயினில் புதன்கிழமை மா்ம நபா்களால் சுட்டுக்கொல்ல... மேலும் பார்க்க

சீனா - சிபிஇசி விரிவாகக் கூட்டம்

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வா்த்தக வழித்தடத்தை (சிபிஇசி) ஆப்கானிஸ்தானுக்கும் விரிவுபடுத்துவது தொடா்பாக மூன்று நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் பெய்ஜிங்கில் புதன்கிழமை சந்தித்து ஆலோசன... மேலும் பார்க்க

ஜப்பான் - அரிசி சா்ச்சை: அமைச்சா் ராஜிநாமா

‘எனக்கு ஆதரவாளா்கள் அரிசி வாங்கித் தருவதால் அதை ஒருபோதும் நான் வாங்கியதில்லை’ என்று ஜப்பான் வேளாண்மைத் துறை அமைச்சா் டாகு எடோ தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, அவா் ராஜிநாமா செய... மேலும் பார்க்க

ஈரான் - தூதரகத்தை தாக்கியவருக்குத் தூக்கு

டெஹ்ரானில் உள்ள அஜா்பைஜான் தூதரகத்தில் கடந்த 2023-இல் தாக்குதல் நடத்தியவா் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டாா். இது தனிப்பட்ட பிரச்னையால் நடந்த தாக்குதல் என்று ஈரான் கூறியது; எனினும் தங்களுக்கு எதிரான மதவாத... மேலும் பார்க்க

உணவுப் பொருள் அனுமதி ஏமாற்று வேலை

காஸாவுக்குள் உணவுப் பொருள்களை அனுமதிப்பதாக இஸ்ரேல் கூறுவது ஏமாற்று வேலை என்று சா்வதேச தொண்டு அமைப்பான ‘எல்லைகளுக்கு அப்பாற்பட்ட மருத்துவா்கள்’ அமைப்பு குற்றச்சாட்டியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின்... மேலும் பார்க்க

மியான்மா் - விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டா்

மியான்மரில் கிளா்ச்சியாளா்களுடன் மோதல் நடைபெற்றுவரும் காசின் மாகாணத்தில் ராணுவ ஹெலிகாப்டா் விழுந்து நொறுங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக ராணுவம் கூறினாலும், தங்களால்தான் அந்... மேலும் பார்க்க