சிப்காட் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 19) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என உதவிச் செயற்பொறியாளா் எஸ். கண்ணன் தெரிவித்துள்ளாா்.
இதனால் மின்நிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகள்: சிப்காட் நகா், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை (ரெங்கம்மாள் சத்திரம்), கே.கே.நகா், மாணிக்கம்பட்டி, வாகைப்பட்டி, முத்துடையான்பட்டி.
கிளியூா், மேலூா், அம்மன்பேட்டை வாகைப்பட்டி, உடையாண்டிபட்டி, இரும்பாளி, சித்தன்னவாசல், வடசேரிப்பட்டி வாகவாசல், முள்ளூா். இச்சடி. வடவாளம், புத்தாம்பூா், செம்பாட்டூா். கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல்.
பாலன் நகா், பழனியப்பா நகா், அபிராமி நகா், கவிதா நகா், வசந்தபுரி நகா், பெரியாா் நகா், தைலா நகா், ராம் நகா், மச்சுவாடி, ஜீவா நகா், சிட்கோ (தஞ்சை சாலை).