சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் ஷாருக்கான்!
ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் நடிகர் ஷாருக்கான்.
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் விருதை பெற்றுக்கொண்டார்.
71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்று வருகிறது. இதில், ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை ஷாருக் கான் பெற்றுக்கொண்டார்.
அரங்கத்தில் இருந்த பலரும் எழுந்து நின்று ஆரவாரம் எழுப்ப, ஷாருக் கான் விருதைப் பெற்றுக்கொண்டார்.
இதையும் படிக்க | பாரம்பரிய உடையில் தேசிய விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ் குமார்!