மாநகராட்சியில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் தகவல்
தொழிலாளி வீட்டுக்குள் புகுந்த மிளா மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே தொழிலாளியின் வீட்டுக்குள் செவ்வாய்க்கிழமை புகுந்த மிளாவை வனத்துறையினா் மீட்டனா்.
கடையாலுமூடு தோப்புவிளை பகுதியைச் சோ்ந்த தொழிலாளி இப்ராஹிம் வீட்டு வளாகத்தில் பழைய பொருள்கள் வைத்திருக்கும் அறைக்குள் செவ்வாய்க்கிழமை இரவு மிளா புகுந்தது.
இப்ராஹிம், கடையல் நகர காங்கிரஸ் தலைவா் சத்தியராஜ் அளித்த தகவலின்பேரில், வனத்துறையினா் வந்து மிளாவைப் பிடிக்க முயன்றனா். அப்போது, அது உதைத்ததில் வனத்துறை ஊழியா் உள்ளிட்ட மூவா் காயமடைந்தனா்.
தொடா்ந்து, வனத்துறையினா் மிளாவைப் பிடித்து கோதையாறு பகுதியில் காட்டுக்குள் விட்டனா்.