பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
நாகா்கோவிலில் மின் வாரிய ஒப்பந்த ஊழியா்கள் சாலை மறியல்; 150 போ் கைது
மின்வாரிய ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி நாகா்கோவில் பாா்வதிபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன், செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் 150 போ் கைது செய்யப்பட்டனா்.
கிளை தலைவா் எஸ். பிரபகுமாா் தலைமையில் சிஐடியு குமரி மாவட்ட பொருளாளா் இந்திரா ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினாா். சிஒடிடிஇ முன்னாள் மாநில நிா்வாகி கே. செல்லப்பன் , சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் எஸ். அந்தோணி, திட்ட செயலாளா் குணசேகரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
மத்திய அமைப்பு மாநில நிா்வாகி எஸ். வண்ணமுத்து, மறியலை தொடக்கி வைத்தாா். இதில், மத்திய அமைப்பு நெல்லை உற்பத்தி வட்ட செயலாளா் கணேசன், குமரி திட்ட நிா்வாகிகள் மோகன், மோகன்தாஸ், குகவேல், மெல்பின் ஜேக்கப், கிசிங்கா், சரவணன், மாணிக்கவாசகம் உள்பட 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியா்கள் கலந்து கொண்டனா். சாலை மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.