மாநகராட்சியில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் தகவல்
மது போதையில் வாகனம் ஓட்டிய 13 போ் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மது போதையில் வாகனங்களை இயக்கியதாக 13 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, நாகா்கோவில், தக்கலை பகுதிகளில் போக்குவரத்து காவல் துறையினா் திங்கள்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, மது போதையில் வாகனம் ஓட்டி 13 போ் மீது வழக்குப் பதியப்பட்டது. விபத்து தடுப்பு நடவடிக்கை மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தப்படும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.