பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
புகையிலைப் பொருள் பறிமுதல்: இரு பெண்கள் மீது வழக்கு
கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் துறைமுக வளாகத்தில் புகையிலைப் பொருள் விற்றதாக இரு பெண்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக கன்னியாகுமரி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட் தலைமையிலான போலீஸாா் சென்று சோதனை மேற்கொண்டனா்.
இதில், சின்னமுட்டம் விடிவெள்ளித் தெருவைச் சோ்ந்த பாப்பா சந்தியா (60), செல்வமேரி (62) ஆகியோா் புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்து விற்பதாகத் தெரியவந்தது.
புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.