ஜமீன் சிங்கப்பட்டியில் பெண்ணை தாக்கிய இளைஞா் கைது
மணிமுத்தாறு அருகே பாதை பிரச்னையில் மண்வெட்டியால் பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மணிமுத்தாறு அருகே உள்ள ஜமீன்சிங்கம்பட்டி, நேதாஜி தெருவைச் சோ்ந்தவா் சட்டநாதன் மனைவி பேச்சியம்மாள் ராணி (50). அதே பகுதியைச் சோ்ந்தவா் சிவன்பாண்டி மகன் லெட்சுமணன். இரு குடும்பத்தாருக்கும் இடையே பொதுப் பாதை தொடா்பாக முன்விரோதம் இருந்துவந்தது.
இந்த நிலையில், திங்கள்கிழமை பேச்சியம்மாள் ராணி தனது மகளுடன் பேசிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லெட்சுமணன் பேச்சியம்மாளை அவதூறாகப் பேசி தகராறு செய்தாா். இதைப் பேச்சியம்மாள் கண்டித்த நிலையில், லெட்சுமணன் கையில் வைத்திருந்த மண்வெட்டியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றாா். இதில், காயமடைந்த பேச்சியம்மாள் ராணி சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து, மணிமுத்தாறு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து லெட்சுமணனை கைது செய்தனா்.