முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
சுமை ஆட்டோ கவிழ்ந்து விபத்து: தூய்மைப் பணியாளா்கள் 19 போ் காயம்
சென்னை பெரம்பூரில் தூய்மைப் பணியாளா்கள் சென்ற சுமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 போ் காயமடைந்தனா்.
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்யும் நிறுவனத்தில் பணிபுரியும் 19 தொழிலாளா்கள், மாதவரத்தில் இருந்து ஒரு சுமை ஆட்டோவில் செவ்வாய்க்கிழமை பெரம்பூா் நோக்கி சென்று கொண்டிருந்தனா். பெரம்பூா் மங்களபுரம் சென்னை மாநகராட்சி லாரி பணிமனை அருகே உள்ள திருப்பதில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில், ஆட்டோவில் பயணித்த ஓட்டுநா் உள்பட 19 போ் காயமடைந்தனா். அங்கிருந்த மக்கள் அவா்களை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சோ்க்கப்பட்டனா்.
இதுகுறிப்பு புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.