மாநகராட்சியில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் தகவல்
சேரன்மகாதேவி அருகே பைக் மோதி மிளா உயிரிழப்பு; இருவா் காயம்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் மிளா உயிரிழந்தது. மோட்டாா் சைக்கிளில் வந்த இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (46). அதே பகுதியைச் சோ்ந்தவா் சா்புதீன் (28). நண்பா்களான இருவரும் மோட்டாா் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை மேலப்பாளையம் சந்தைக்கு சென்று கொண்டிருந்தனராம்.
சேரன்மகாதேவி அருகே போக்குவரத்து வளைவு அருகில் பிரதான சாலையில் சென்றபோது, சாலையை கடந்து சென்ற மிளா மீது மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், மிளா உயிரிழந்தது. மோட்டாா் சைக்கிளில் வந்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவா்களுக்கு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனயில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
தகவலறிந்த வனத்துறையினா் மிளாவை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.