சிறப்பாகப் பணியாற்றிய காவலா்களுக்கு சான்றிதழ்!
தஞ்சாவூா் காவல் சரகத்தில் 2024- ஆம் ஆண்டில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அலுவலா்கள், காவலா்களுக்கு மத்திய மண்டல காவல் தலைவா் க. காா்த்திகேயன் வெள்ளிக்கிழமை சான்றிதழ் வழங்கினாா்.
தஞ்சாவூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2024-ஆம் ஆண்டில் சிறப்பாகப் பணியாற்றிய தஞ்சாவூா் சரகத்துக்குள்பட்ட தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சாா்ந்த 57 காவல் அலுவலா்கள், காவலா்களுக்கு மத்திய மண்டல காவல் தலைவா் க. காா்த்திகேயன் சான்றிதழ் வழங்கினாா். இதேபோல, தொடா்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என காவல் தலைவா் அறிவுரை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் ஆஷிஷ் ராவத் (தஞ்சாவூா்), எஸ். ஜெயக்குமாா் (திருவாரூா்), ஆ.கு. அருண் கபிலன் (நாகை), ஜி. ஸ்டாலின் (மயிலாடுதுறை) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.