செய்திகள் :

சிறுமலையில் மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி - திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

post image

சிறுமலையில் மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலியான விவகாரத்தில் தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்மப்பொருள் வெடித்து ஒருவர் இறந்து உள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

NIA, ATS உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வரும் நிலையில், பேட்டரி வயர் மற்றும் வெடி பொருட்கள் உள்ளதால் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் நிலவுவதாக செய்திகள் வருகின்றன.

ஏற்கனவே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சென்னையில் NIA-வால் கைது செய்யப்பட்ட நிலையில், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவிற்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

நடப்பாண்டில் ஜிஎஸ்டி வருவாய் 11% அதிகரிக்கும்!

தமிழ்நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காவல் துறையை தன்னகத்தே வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் -ஓ , தினம் ஒரு வீடியோ சூட்டிங்கில் பிஸியாக உள்ளார்,

நாடக வீடியோக்கள் மீதான நாட்டத்தை குறைத்து கொண்டு, தமிழ்நாடும் நம் மக்களும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென்று உணர்வோடு, முதல்வர் அடிக்கடி சொல்லி காட்டுகின்ற அந்த இரும்புக்கரத்தை இப்போதாவது பயன்படுத்தி செயல்பட வேண்டும் . இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் மக்களின் பாதுகாப்பு சீா்குலைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவுக்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீா்குலைந்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ள... மேலும் பார்க்க

தமிழுக்குத் தொண்டாற்றிய 38 பேருக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருது: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

தமிழ் வளா்ச்சிக்கு சிறந்த பங்களிப்பு வழங்கிய 38 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருதை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா். தமிழ் மொழிக்குத் தொண்டாற்றி வரும் தனிநபா் மற்ற... மேலும் பார்க்க

தேவாலய திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி

கன்னியாகுமரியில் தேவாலய திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கன்னியாகுமரி மாவட்ட... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி

கன்னியாகுமரியில் தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், புத்தன்துறை பகுதியில் உள்ள தேவாலயத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக திருவிழ... மேலும் பார்க்க

10, 11, 12 பொதுத்தேர்வுகள்: உதவி எண்கள் அறிவிப்பு

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்கள், ஐயங்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-25-ஆம் கல்வியாண்டிற்கான மார்ச்/... மேலும் பார்க்க

சீமான் மேல்முறையீட்டு மனு; திங்கள்கிழமை விசாரணை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரிக்கிறது. திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 20... மேலும் பார்க்க