இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
தருமபுரி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
தருமபுரியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (73). இவா் கடந்த 2023 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட போக்ஸோ நீதிமன்ற நீதிபதி மோனிகா, கோவிந்தசாமிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.