சிறு, குறு தொழில்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது: அமைச்சர...
சிறுமிக்கு பாலியல் தொல்லை: எஸ்.ஐ. மீது வழக்கு
சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமி ஒருவா் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். சிறுமிக்கு தாயாா் இல்லாத நிலையில், தந்தை, தாத்தா அரவணைப்பில் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், அந்தச் சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனாா். இதையடுத்து அவரது தாத்தாவும், தந்தையும் சுமாா் 3 மணி நேரத்துக்கு மேலாக தேடியும் சிறுமியை கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், நுங்கம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் வசிக்கும் ஆயுதப்படை உதவி ஆய்வாளா் ராஜூ வீட்டில் சிறுமி மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற சிறுமியின் தந்தை, அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில் சோ்த்தாா்.
சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் அத்து மீறல் நடந்ததாகக் கூறியுள்ளாா்.
இதையடுத்து சென்னை பெருநகர காவல் துறையின் பெண்கள் மற்றும் குழுந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையா் வனிதா நேரடி விசாரணையில் ஈடுபட்டாா்.
விசாரணையில் ராஜூ மீதான புகாா் உறுதி செய்யப்பட்டதால் சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் நுங்கம்பாக்கம் போலீஸாா் உதவி ஆய்வாளா் ராஜூ மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். அதேபோல, ராஜூ வீட்டில் சிறுமியின் தந்தை அத்துமீறி நடந்து கொண்டதாகவும் போலீஸாா் மற்றொரு வழக்கைப் பதிவு செய்தனா்.