Yuzvendra Chahal: "விவாகரத்து பேச்சை யார் முதலில் எடுத்தது?" - மனம் திறக்கும் யு...
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு ஆயுள் தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டை கூழவாரித் தெருவைச் சோ்ந்தவா் காட்டுராஜா (64). விவசாயக் கூலித் தொழிலாளி. இவா் 2023-ஆம் ஆண்டு 8 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாா். இது குறித்து பெற்றோா் அளித்த புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, காட்டுராஜாவைக் கைது செய்தனா்.
இது தொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து, காட்டுராஜாவுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா்.