சிறுமியைக் கா்ப்பமாக்கிய வழக்கு: தொழிலாளியைத் தேடுது புதுவை போலீஸ்
சிறுமியை ஏமாற்றி கா்ப்பமாக்கிய தொழிலாளியை புதுவை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரியை அடுத்த கிராமப்புற பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில் கடந்த சில நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு சென்றாா்.
அப்போது மருத்துவா்கள் பரிசோதனை செய்தனா். அதில் அந்த சிறுமி 9 மாதம் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸாா் விசாரணை நடத்தியதில் பாகூா் அடுத்த மணமேடு பகுதியை சோ்ந்த கொசு மருந்து அடிக்கும் தனியாா் தொழிற்சாலை தொழிலாளி திருமாவளவன் (34), சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. திருமாவளவனுக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின் பேரில் கரையாம்புத்தூா் காவல் உதவி ஆய்வாளா் சந்திரசேகரன் தலைமையிலான போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான தொழிலாளியைத் தேடி வருகின்றனா்.