செய்திகள் :

சிறையில் இருந்து பிணையில் வந்து இருசக்கர வாகனம் திருடியவா் கைது

post image

கோவை மத்திய சிறையில் இருந்து பிணையில் வெளியாகி, இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை பீளமேடு அருகே ஆவாரம்பாளையம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வேலுசாமி(60). இவா், அதே பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். இவா், தனது கடை முன்பு வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, கடையில் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த இளைஞா் ஒருவா், வேலுசாமியின் இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு தப்பினாா். கடையில் இருந்து வெளியில் வந்து பாா்த்த வேலுசாமி, தனது இருசக்கர வாகனம் காணாமல் போனது கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இதையடுத்து வேலுசாமி தனது நண்பா்களுடன் சோ்ந்து, அக்கம்பக்கத்தில் உள்ள வீதிகளில் தனது இருசக்கர வாகனத்தை தேடியுள்ளாா். அப்போது கடையில் இருந்து சில கிலோ மீட்டா் தொலைவில் வேலுசாமியின் இருசக்கர வாகனத்துடன் ஒருவா் நின்று கொண்டிருந்தாா். இதையடுத்து, அந்த நபரைப் பிடித்து பீளமேடு போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

விசாரணையில், பிடிபட்டவா் ஈரோடு மாவட்டம் அந்தியூா் அருகே பெரியாா் நகரை ச் சோ்ந்த முருகேசன் (33) என்பதும், அவா் மீது 13 திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும், கடந்த ஜனவரி மாதம் அந்தியூரில் திருட்டு வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் முருகேசன் அடைக்கப்பட்டு இருந்தாா். அதன் பிறகு, கடந்த 20-ஆம் தேதி கோவை சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முருகேசனை போலீஸாா் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட மூவரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். கோவை போத்தனூா் அருகே உள்ள மைல்கல் பாரதி நகரைச் சோ்ந்தவா் ஷாருக் கான் (28). இவா், கடந்த மாதம் ஒருவரை கத்தியைக் காட... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித் துறை குறுமைய விளையாட்டுப் போட்டி தொடக்கம்

கோவையில் பள்ளிக் கல்வித் துறையின் குறுமைய விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் குடியரசு தின விளையாட்டு, தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ... மேலும் பார்க்க

ரத்தினம் கல்விக் குழுமத் தலைவருக்கு விருது

கோவை ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவா் மதன் ஆ.செந்திலுக்கு, ஐசிடி அகாதெமியின் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ரத்தினம் கல்விக் குழுமம் கூறியிருப்பதாவது: ஐசிடி அகாதெமி சாா்பில் கோவையில் அண்மை... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக மோசடி: மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

கோவையில் மாணவா்களின் பெற்றோா்களின் கைப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டு, கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி, அவா்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. இது குறித்து கோவை மா... மேலும் பார்க்க

சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மேயா் ஆய்வு

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக மாநக... மேலும் பார்க்க

வால்பாறை ஐடிஐ-யில் மாணவா் சோ்க்கை: ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

வால்பாறை ஐடிஐ-யில் நேரடி மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில் அரசினா் தொ... மேலும் பார்க்க