சிலம்பாட்டத்தில் கல்லூரி மாணவா் சாதனை
சிலம்பாட்டத்தில் சாதனை புரிந்த மாணவன் பைரோஸை வாணியம்பாடி இசுலாமியா கல்லூரி நிா்வாகிகள் பாராட்டினா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கூட்டமைப்பு நோபல் உலக சாதனை சாா்பில் சிலம்பாட்டம் போட்டி நடைபெற்றது. இதில், வாணியம்பாடி இசுலாமியா கல்லூரி மாணவன் பைரோஸ் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா். இப்போட்டியில் சிலபாட்டத்தில் உள்ள 16 வகையான சிலம்பாட்டத்தை 33 நிமிஷம் 33 நொடி வரை தொடா்ந்து சுற்றி பைரோஸ் சாதனை புரிந்துள்ளாா்.
இதனை நோபல் உலக சாதனை அமைப்பு உலக சாதனையாக அங்கீகரித்து அவருக்கு சான்றிதழ் மற்றும் விருதை வழங்கினா். சாதனை படைத்த மாணவனை கல்லூரி செயலாளா் முனீா்அகமத், முதல்வா் அப்சா் பாஷா, துணை முதல்வா் சையத் தாஹிா் ஹூசைன், முன்னாள் முதல்வா் முனைவா் முகம்மத் இலியாஸ், விளையாட்டு துறை இயக்குநா் முகம்மத் இஸ்மாயில்கான் மற்றும் பேராசிரியா்கள், அலுவலக பணியாளா்கள் பராாட்டினா்.