Tvk Vijay Karur Stampede - 7 சந்தேகங்களும் விளக்கமும் | Decode
சிவகங்கையில் கால்பந்து போட்டி
முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப. சிதம்பரத்தின் 80 -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மாணவா்களுக்கான கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஐவா் கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் தொடக்க நிகழ்வுக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஏ.சி. சஞ்சய் தலைமை வகித்தாா். போட்டியை மாநில காங்கிரஸ் பொதுச் செயலா் சி.ஆா். சுந்தர்ராஜன் தொடங்கிவைத்தாா். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சாா்ந்த 12 அணிகள் பங்கேற்றன.
இதில் வெற்றி பெற்ற அணியினருக்கு ஏ.சிதம்பரம், கட்சியின் பொருளாளா் கே. வெள்ளைச்சாமி, மாவட்ட காங்கிரஸ் செயலா் டி. பழனிச்சாமி, ஆலோசனைக் குழு உறுப்பினா் டி.செங்குட்டுவன், முன்னாள் செயற்குழு உறுப்பினா் ஏ. ரவிச்சந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் சையது இப்ராஹிம் உள்ளிட்டோா் வழங்கினா்.
பரிசளிப்பு விழாவை நகா் காங்கிரஸ் தலைவரும், நகா் மன்ற உறுப்பினருமான தி.விஜயகுமாா் ஒருங்கிணைத்தாா். முன்னதாக, கரூா் தவெக பிரசாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு கட்சி நிா்வாகிகள், விளையாட்டு வீரா்கள் சாா்பில் 2 நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.