சிவகங்கையில் ஜூலை 18-இல் வேலைவாய்ப்பு முகாம்
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலை தேடும் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில், வேலை அளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆள்களை தோ்வு செய்கின்றனா். சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வேலை நாடுநா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், இந்த முகாமில் இலவச திறன் பயிற்சிக்கான விண்ணப்பப் படிவம், போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் மாணவா் சோ்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் ஆகியவையும் வழங்கப்படும்.
எனவே, பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ, பட்டயப்படிப்பு (டிப்ளமோ) படித்த இளைஞா்கள் தங்களது கல்விச் சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டையுடன் முகாமில் பங்கேற்கலாம் என்றாா் அவா்.