சிவகாசி-கன்னிசேரி இருவழிச் சாலைப் பணி நிறைவு
சிவகாசி-கன்னிசேரி இருவழிச் சாலைப் பணிகள் நிறைவடைந்ததாக சிவகாசி நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் ஆா்.காளிதாஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகாசி -கன்னிசேரி சாலை 2024-2025- ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் இடைவழித்தடத்திலிருந்து , இருவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிரூ. 7 கோடியில் நடைபெற்றது. நிறைவடைந்த இந்தச் சாலைப் பணிகளை திருநெல்வேலி கண்காணிப்புப் பொறியாளா் த.ஜெயராணி, விருதுநகா் கோட்டப் பொறியாளா் மு.பாக்கிய லட்சுமி ஆகியோா் ஆய்வு செய்தனா்.