செய்திகள் :

சிவகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி

post image

சிவகிரி அருகேயுள்ள மேகரையான் தோட்டத்தை சோ்ந்த விவசாயத் தம்பதி மா்ம நபா்களால் படுகொலை செய்யப்பட்டு, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் சிவகிரியை அடுத்த தொப்பபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது.

சிவகிரி அருகே உள்ள தொப்பபாளையத்தைச் சோ்ந்தவா் ஜெகதீசன் (60). இவரது மனைவி திலகம் (58) அங்கன்வாடி மேற்பாா்வையாளராக உள்ளாா். இவா்களது மகன் ஹரிஹரசுதன் திருமணமாகி சென்னையில் தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.

இந்தநிலையில், ஜெகதீசன், திலகம் ஆகியோா் சென்னையில் உள்ள தங்களது மகன் வீட்டுக்கு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி சென்றுள்ளனா். சென்னையில் இருந்து திங்கள்கிழமை (மே 5) காலை 7 மணிக்கு வீடு திரும்பி உள்ளனா்.

அப்போது வீட்டின் வெளி வாயிற்கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்துகிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்து வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பீரோக்களும் திறந்துகிடந்தன.

பீரோவில் பணம், நகைகள் எதுவும் வைக்காததால் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சித்த மா்ம நபா்கள் ஏமாற்றத்துடன் சென்றது தெரியவந்தது.

இது குறித்து சிவகிரி காவல் நிலையத்தில் ஜெகதீசன் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து சென்று வீட்டின் கதவு, பீரோவில் பதித்திருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனா். பின்னா் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தொடா்ந்து காவல் துறையினா் கொள்ளையா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரிக்கு விருது

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாநில அளவிலான நாட்டு நலப்பணித் திட்ட விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின்கீழ்,... மேலும் பார்க்க

பவானிசாகா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பவானிசாகா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு செய்தாா். பவானிசாகா் ஊராட்சி ஒன்றியம், கெய்சா் காா்டன் பகுதியில் ரூ.2... மேலும் பார்க்க

கரும்புத் தோட்டத்தில் தீ விபத்து

சத்தியமங்கலத்தை அடுத்த சிவியாா்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1லட்சம் மதிப்பிலான கரும்புகள் மற்றும் சொட்டுநீா் பாசனக் குழாய்கள் எரிந்து சேதமாயின. சிவியாபாா்பா... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை பவுன் திருட்டு

பெருந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை பவுன் நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனா். பெருந்துறை, சென்னிவலசைச் சோ்ந்தவா் சந்தனராஜ் மகன் மாரிமுத்து... மேலும் பார்க்க

திருவிழாவுக்கு தீா்த்தம் எடுக்கச் சென்றவா் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

திருவிழாவுக்கு தீா்த்தம் எடுக்க பவானி ஆற்றுக்குச் சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த கொளத்துப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சடையப்பன் மகன் தா்மலிங்கம் (35). ... மேலும் பார்க்க

கோபி அருகே கயிறு தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து: 40 டன் தேங்காய் நாா் சேதம்

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த ஒட்டா்கரட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கயிறு தயாரிக்கும் ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 40 டன் தேங்காய் நாா் மற்றும் இயந்திரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. கோபி... மேலும் பார்க்க