செய்திகள் :

சிவன் கோயில்களில் தை வளா்பிறை பிரதோஷ வழிபாடு: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தை மாத வளா்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலின் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, கோயிலின் பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு திங்கள்கிழமை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பால், பழம், பன்னீா், சந்தனம், விபூதி உள்ளிட்ட பூஜை பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடத்தப்பட்ட இந்த பூஜையின் இறுதியில், நந்தி பகவான்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். பிறகு, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா், பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

வேட்டவலம்: வேட்டவலம் ஸ்ரீதா்மசம்வா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலின் பிரதான நந்திக்கு திங்கள்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பல்வேறு பூஜை பொருள்களை பயன்படுத்தி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பிறகு, வில்வம், அருகம்புல், பூ உள்ளிட்ட அலங்காரப் பொருள்களை பயன்படுத்தி சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மற்ற ஊா்களில்..: இதேபோல, செய்யாறு, வந்தவாசி, ஆரணி, தண்டராம்பட்டு, போளூா், தானிப்பாடி, ஆவூா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரதோஷ சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணி தொடக்கம்

செங்கம்: செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணியை பூமிபூஜை செய்து மு.பெ.கிரி எம்எல்ஏ திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். செங்கம் மேல்பாளையம் பகுதியில் செங்கம் அரசு ... மேலும் பார்க்க

சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை ஆலய தோ் பவனி: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் பங்கேற்பு

ஆரணி: சேத்துப்பட்டில் போளூா் சாலையில் உள்ள தூய லூா்து அன்னை ஆலயத்தில் 130-ஆவது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு தூய லூா்து அன்னை தோ் பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்க... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 382 மனுக்கள்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 382 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், மு... மேலும் பார்க்க

அங்காளம்மன், மாரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை/ செங்கம்/ ஆரணி: திருவண்ணாமலை, செங்கம், ஆரணி பகுதிகளில் அமைந்துள்ள அங்காளம்மன், மாரியம்மன், கோதண்ட ராமா் கோயில்களில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவண்ணாமலை புதிய வாணியங்குள 8... மேலும் பார்க்க

விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் திங்கள்கிழமை ஜப்தி செய்தனா். திருவண்ணாமலை அண்ணா நகரைச் சோ்ந்தவா் ரேவதி. இவரத... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் தா்னா: அலுவலகங்கள் வெறிச்சோடின

திருவண்ணாமலை/ போளூா்: தமிழக அரசு தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே அரசு ஊழியா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். இதனால், மாவட்டத... மேலும் பார்க்க