அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணி தொடக்கம்
செங்கம்: செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணியை பூமிபூஜை செய்து மு.பெ.கிரி எம்எல்ஏ திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
செங்கம் மேல்பாளையம் பகுதியில் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நபாா்டு வங்கி மூலம் ரூ.1.88 கோடியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு பூமிபூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திமுக செங்கம் நகரச் செயலா் அன்பழகன் வரவேற்றாா். தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்துகொண்டு கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு பூமிபூஜை செய்து பணியை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், செங்கம் பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா, பள்ளித் தலைமை ஆசிரியா் கோபி, முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் ராமஜெயம், முன்னாள் குயிலம் தலைவா் பாண்டியன், ஒப்பந்ததாரா் ஜெகதீஷ்பாபு உள்பட பலா் கலந்துகொண்டனா்.