செய்திகள் :

``சிவில் நீதிபதி தேர்வு எழுத 3 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் வேண்டும்'' - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

post image

நீதிபதிக்கான தேர்வுகள் எழுத மூன்றாண்டு வழக்கறிஞர் அனுபவம் கட்டாயம் தேவை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

``2002 ஆம் ஆண்டு உத்தரவுக்குப் பிறகு, புதிய சட்டப் பட்டதாரிகளை எந்த நடைமுறை அனுபவமும் இல்லாமல் நீதித்துறை சேவையில் சேர அனுமதித்ததால், பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது" என இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய் குறிப்பிட்டுள்ளார்.

Court- Representational Image

இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதிகள் ஏ.ஜி.மாசிஹ், கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிபதிகளுக்கு நடைமுறை நீதிமன்ற அனுபவத்தை உறுதி செய்வதன் மூலம் நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்த இயலும் என குறிப்பிட்டுள்ளது.

அகில இந்திய நீதிபதிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கினர்.

சிவில் நீதிபதிகள் (ஜூனியர் பிரிவு) தேர்வு எழுத குறைந்தபட்சம் மூன்றாண்டு அனுபவ பயிற்சி தேவை என கருதுவதாக குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், சிவில் நீதிபதிகள் (ஜூனியர் பிரிவு) தேர்வு எழுதும் ஒவ்வொரு வேட்பாளரும் நிச்சயம் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி பெற்றிருப்பதை உறுதிசெய்ய அனைத்து மாநில அரசுகளும் விதிகளைத் திருத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்

மேலும், உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்றதற்கான சான்றிதழை 10 ஆண்டுகள் அனுபவமுள்ள மூத்த வழக்கறிஞர்கள் அல்லது நீதித்துறை அதிகாரிகளிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது.

புதிய சட்ட பட்டதாரிகளால் வழக்கறிஞர் அனுபவமில்லாமல் நீதிபதிக்கான தேர்வுகள் எழுத இயலாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கறிஞரின் பயிற்சி காலத்தை சட்ட பட்டதாரியின் வழக்கறிஞர் தற்காலிக சேர்க்கை தேதியிலிருந்து கணக்கிடலாம். இருப்பினும், இந்த நிபந்தனை இனி வரும் ஆட்சேர்ப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த உத்தரவு வெளியாவதற்கு முன்பு ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ஆட்சேர்ப்பை இந்த உத்தரவு பாதிக்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அரசின் 'துணைவேந்தர் நியமன' அதிகாரம்; சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக... மேலும் பார்க்க

நமக்குள்ளே...

பாலியல் வன்கொடுமை என்பதே கொடூரம்தான். கொடூரத்திலும் கொடூரம்... பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை. தற்போது இந்த வழக்கில், 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, சட்டத்த... மேலும் பார்க்க

"இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல" - இலங்கை தமிழர் மனுவில் உச்ச நீதிமன்றம்!

இலங்கை நாட்டைச் சேர்ந்தவரின் அடைக்கலம் கோரும் மனு மீதான விசாரணையின்போது, இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது பேசு பொருளாகியுள்ளது. நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி கே வி... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை : `கேரளா அரசு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ - உச்ச நீதிமன்றம்

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரள அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தது. கேரளா அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதி... மேலும் பார்க்க

`ஓய்வு பெறும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம்’ - உச்ச நீதிமன்றம் அதிரடி

உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற்றதற்கு பிறகு அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியங்களில் பல்வேறு பாகுபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தன. குறிப்பாக வழக்கறிஞர்களாக இருந்து நீதிபதிகளாக பதவி ஏற்கும் ... மேலும் பார்க்க

Sofiya Qureshi: `உங்க முதலை கண்ணீரை நம்ப தயாராக இல்லை’ - பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் குட்டு

`பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அவர்களுடைய சகோதரியை வைத்து பதில் சொல்லி இருக்கிறோம்’ என ராணுவ அதிகாரி சோபியா குரேஷியாவை மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா மிக மோசமான முறையில் பேசி இருந்தார். ராணுவ அதி... மேலும் பார்க்க