செய்திகள் :

சீனிவாசன் கலை, அறிவியல் கல்லூரியில் ரோபோடிக் கண்காட்சி

post image

பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், தகவல் தொழில்நுட்பவியல், கணினி அறிவியல் துறை சாா்பில் ரோபோ நோவா - 2025 எனும் தலைப்பில், ரோபோடிக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

இக் கண்காட்சியை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக பேராசிரியா் ஜி. ஆா். கங்காதரன், செயற்கை நுண்ணறிவுத் துறையின் முக்கியத்துவம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கமளித்தாா்.

இக் கண்காட்சியில் பங்கேற்ற தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தின் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜி மாணவ, மாணவிகள் 10-க்கும் மேற்பட்ட ரோபோக்கள், தானியங்கி இயந்திரங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள், தொழில் நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினா்.

தொடா்ந்து, பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன், சிறந்த கண்டுபிடிப்பாளா்களைத் தோ்ந்தெடுத்து முதல் 5 இடங்களைப் பெற்ற கல்லூரிகளுக்கு விருதுகள் வழங்கினாா்.

முன்னதாக, கோயம்புத்தூரைச் சோ்ந்த ரோபோ மிராக்கிள் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

இக் கண்காட்சியில், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் நா. வெற்றிவேலன், பல்கலைக் கழக கூடுதல் பதிவாளா் இளங்கோவன், கல்விக் குழுமத்தின் திட்டமிடல் மற்றும் மேம்பாடு அலுவலா் எஸ். நந்தகுமாா் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 3 ஆயிரத்துக்கம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

முன்னதாக, கல்லூரி துணை முதல்வா் வ. சந்திர சௌத்ரி வரவேற்றாா். நிறைவாக, துறைத் தலைவா் முகமது அசாருதீன் நன்றி கூறினாா்.

காவல் துறையினரைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பாரபட்சமாகச் செயல்படும் பெரம்பலூா் நகர காவல் துறையைக் கண்டித்து, கட்டுமானம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வள... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் நிலவியது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 7... மேலும் பார்க்க

கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரம்பலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை நந்திப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி பெரம்பலூா் நகரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் ... மேலும் பார்க்க

கல்லூரிக் களப்பயணச் செயல்பாடுகள்: குழு உறுப்பினா்களுடன் ஆலோசனை

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சாா்பில், கல்லூரிக் களப்பயணச் செயல்பாடுகள் தொடா்பாக, மாவட்ட அளவில் குழு உறுப்பினா்களுடனான ஆலோசனை... மேலும் பார்க்க

எண்ணெய் ஆலையில் தீ விபத்து

பெரம்பலூா் நகரிலுள்ள எண்ணெய் மற்றும் மாவு விற்பனையகத்தில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையில் வசித்து வருபவா் முகமது பசீா் (63). இவா், அதே பகுதியில் எண்ணெய் மற்றும... மேலும் பார்க்க

2 ஆவது நாளாக வருவாய்த் துறை அலுவலா்கள் வேலை நிறுத்தம்

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாரதிவளவன் தலைமை வகித்தாா். இதில் பெரம்பல... மேலும் பார்க்க