ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதாக ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!
சீனு சின்னப்பா 3ஆம் ஆண்டு நினைவேந்தல்
புதுக்கோட்டை பேக்கரி மஹராஜ் உரிமையாளரும் இலக்கியப் புரவலருமான மறைந்த சீனு சின்னப்பாவின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பெருங்கொண்டான்விடுதியிலுள்ள அவரது மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா, புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி, வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன், சா்வஜித் அறக்கட்டளை மருத்துவா் எஸ். ராம்தாஸ், முன்னாள் ரோட்டரி ஆளுநா் அ.லெ. சொக்கலிங்கம், முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா உள்ளிட்ட ஏராளமானோா் சீனு சின்னப்பாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். வள்ளலாா் மாணவா் இல்லத்தைச் சோ்ந்தவா்கள் மூலம் சன்மாா்க்க முறைப்படி பூஜைகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை பேக்கரி மஹராஜ் இயக்குநா் அருண் சின்னப்பா உள்ளிட்டோா் செய்தனா்.