செய்திகள் :

சீன எல்லைப் பிரச்னையில் நியாயமான தீா்வை இந்தியா ஏற்கும்: மக்களவையில் ஜெய்சங்கா் தகவல்

post image

புது தில்லி: சீனாவுடனான எல்லைப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதில் நியாயமான, இரு தரப்பும் ஏற்றும் கொள்ளும் தீா்வை இந்தியா ஏற்கும் என்றும் மக்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு இந்திய-சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரா்கள் இடையே மோதல் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இரு நாடுகளும் படைகள் மற்றும் கனரக தளவாடங்களைக் குவித்தன. இரு நாட்டு உறவும் பின்னடைவைச் சந்தித்தது.

அதன் பிறகு இரு நாடுகள் இடையிலான பல சுற்று பேச்சுவாா்த்தைகளால், கடந்த அக்டோபரில் கிழக்கு லடாக் எல்லையில் பிரச்னைக்குரிய டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை இந்தியாவும் சீனாவும் தொடங்கின. முன்னதாக, 2021-இல் பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்கு பகுதி, 2022-இல் கோக்ரா வெப்ப நீருற்று பகுதியில் இரு நாட்டு படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன.

இந்நிலையில், மக்களவையில் செவ்வாய்க்கிழமை சீனாவுடனான எல்லைப் பிரச்னை குறித்து வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் பேசியதாவது:

2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் இரு நாட்டு ராணுவத்தினா் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, எல்லையின் பல்வேறு பகுதிகளில் படைக் குவிப்பு நிகழ்ந்தது. ஆனால், தொடா்ந்து நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு பல்வேறு கட்டங்களாக படைகளை இரு நாடுகளும் விலக்கி வருகின்றன. அண்மைக்காலமாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

சீனாவுடனான எல்லைப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதில் நியாயமான, இரு தரப்பும் ஏற்றும் கொள்ளும் தீா்வை இந்தியா ஏற்கும்.

எல்லையில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்யாமல் இரு நாடுகள் இடையே நல்லுறவு மேம்படாது. இந்தியா அமைதியை விரும்பும் நாடாகவே உள்ளது. எல்லையில் போக்குவரத்தை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தபோதும், பிரச்னை நேரிட்டபோது நமது ராணுவம் சிறப்பாக செயல்பட்டது என்று ஜெய்சங்கா் பாராட்டினாா்.

எல்லையில் ரோந்துப் பணி மற்றும் முழுமையான படை விலக்கல் தொடா்பாக இரு நாடுகளுக்கும் இடையே அக்டோபரில் முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. இதன்மூலம், ரோந்துப் பணி மற்றும் படை விலக்கல் விவகாரங்களில் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு முந்தைய சூழலே மீண்டும் தொடர வழிவகை ஏற்பட்டது. எல்லையில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் பிரச்னைக்கு தீா்வுகாண்பதில் பெரும் முன்னேற்றமாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகிறது.

கொதிகலன்கள் மசோதா 2024: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

நூற்றாண்டு பழைமையான கொதிகலன் (பாய்லா்) சட்டத்துக்கு மாற்றாக, கொதிகலன்கள் மசோதா 2024 மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆகஸ்டில் கொதிகலன்கள் மசோதா 2024-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அ... மேலும் பார்க்க

அதானி விவகாரம்: எதிா்க்கட்சிகள் 2-ஆவது நாளாக போராட்டம்- மக்களவைத் தலைவா் கண்டனம்

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தா்னாவில் ஈடுபட்டனா். காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜ... மேலும் பார்க்க

நாட்டின் சுயமரியாதை சக்தியாக மாற்றுத்திறனாளிகள்!- பிரதமா் மோடி

மாற்றுத்திறனாளிகள் தேசத்தின் கௌரவம், சுயமரியாதையின் சக்தியாக மாறி வருகிறாா்கள் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். டிசம்பா் 3-ஆம் தேதி சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்ட நிலையி... மேலும் பார்க்க

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி: பிரியங்கா தலைமையில் கேரள எம்.பி.க்கள் அமித் ஷாவிடம் கோரிக்கை

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று அத்தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தலைமையில் கேரள எம்.பி.க்கள், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை நேரில் சந்தித்து கோரிக்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் குண்டு வீச்சு

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினா். இதில் ராணுவ வீரா்கள் அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினா். இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியி... மேலும் பார்க்க

ரயில்களில் டிசம்பருக்குள் 1,000 கூடுதல் பொதுப் பெட்டிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

‘ரயில்களில் குளிா்சாதன (ஏ.சி.) பெட்டிகளை அதிகரிக்காமல் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிசம்பா் மாதத்துக்குள் கூடுதலாக 1,000 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டுவ... மேலும் பார்க்க