கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
சீமானுக்கு ஈரோடு போலீஸ் சம்மன்; விசாரணைக்கு ஆஜராக உத்தரவு - பின்னணி என்ன?
ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. அந்தக் கட்சியின் வேட்பாளரான சீதாலட்சுமிக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 10 நாள்களுக்கும் மேலாக ஈரோட்டில் தங்கியிருந்து பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது, பெரியார் குறித்து சீமான் பேசிய பேச்சுகள், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதில், குறிப்பாக ஜனவரி 28-ஆம் தேதி, ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட அசோகபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் பிரசாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், கலந்துகொண்ட சீமான், "நீ வெங்காயத்தை வீசு, நான் வெடிகுண்டு வீசுகிறேன். நான் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். இன்னும் வீச வில்லை. நான் வெடிகுண்டு வீசினால் உன்னை புதைத்த இடத்தில் புல்கூட முளைக்காது" என்று பேசியதாகத் தெரிகிறது. சீமானின் பேச்சுக்கு பெரியாரிய அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்தன.

இதைத் தொடர்ந்து, சீமான் பேசிய வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களைக் கைப்பற்றிய கருங்கல்பாளையம் போலீஸார் அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணைக்காக 20-ஆம் தேதி, நேரில் ஆஜராகுமாறு கருங்கல்பாளையம் போலீஸார் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸார் சம்மனை நேரடியாக வழங்கியுள்ளனர்.