சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை! -உச்ச நீதிமன்றத்தில் விஜயலக்ஷ்மி திட்டவட்டம்
புது தில்லி: சீமான் மீது விஜயலக்ஷ்மி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக்கோரி, சீமான் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று(ஜூலை 21) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை என்று நடிகை விஜயலக்ஷ்மி நீதிமன்ற விசாரணையில் தெரிவித்துள்ளார்.
சீமானுடன் பேசி தீர்வு காண தயாராக இல்லை என்றும் விஜயலக்ஷ்மி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசமும் கோரப்பட்டுள்ளது.
இதனிடையே, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விஜயலக்ஷ்மி அளித்த பாலியல் புகாரில் புலன் விசாரணை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய விஜயலக்ஷ்மி தரப்ப்புக்கு 4 வாரம் கால அவகாசமும் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.