சீரமைக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு
சிவகாசி மாநகராட்சியில் சீரமைக்கப்பட்ட சுகாதார வளாகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
சிவகாசி மாநகராட்சி கவிதா நகரில் சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், அந்த சுகாதார வளாகம் சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இதன் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மேயா் இ.சங்கீதா கலந்து கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இந்த சுகாதார வளாகத்தை திறந்துவைத்தாா்.
இதில் ஆணையா் கே.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.