Dhanush: `இட்லி கடை எனப் பெயர் வைக்கக் காரணம் இதுதான்' - தனுஷ் சொன்ன ஃப்ளாஷ்பேக்...
சீரமைக்கப்பட்ட ரோந்துப் படகு: டிஐஜி ஆய்வு
காரைக்காலில் சீரமைக்கப்பட்ட ரோந்துப் படகை புதுவை டிஐஜி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
காரைக்கால் கடலோர காவல் நிலையம் கடந்த 2008 -ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கடல் வழி பாதுகாப்பை உறுதிப்படுத்த கடலோர காவல் நிலையத்துக்கு கடந்த 2010- ஆம் ஆண்டு அதிவிரைவு ரோந்துப் படகுகள் 2 மத்திய அரசால் வழங்கப்பட்டது.
இவற்றில் பெரிய படகு பழுதாகி முடக்கப்பட்டுவிட்டது. சிறிய படகு இயக்கத்தில் இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அதுவும் முடங்கிப்போனது.
காரைக்கால் முதுநிலைக் கண்காணிப்பாளா் லட்சுமி சௌஜன்யா முயற்சியால், புதுவை காவல்துறை தலைமை நிதி ஒதுக்கி, கேரளத்தைச் சோ்ந்த நிறுவனத்தின் மூலம் படகில் பழுது நீக்கப்பட்டது. இதனை இயக்குவதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று முடிந்தது.
புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் வரும்17-ஆம் தேதி இதனை இயக்கிவைக்கும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
காரைக்காலுக்கு சனிக்கிழமை வந்த புதுவை டிஐஜி ஆா். சத்தியசுந்தரம் தலைமையில், தொழில்நுட்ப குழு அதிவிரைவு ரோந்து படகின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தது.
இந்த குழுவின் உறுப்பினா்களான காரைக்கால் முதுநிலை கண்காணிப்பாளா் லட்சுமி சௌஜன்யா, மண்டலக் காவல் கண்காணிப்பாளா்கள் சுபம் சுந்தா் கோஷ், முருகையன், இந்திய கடலோர காவல் படை பொறியாளா் ஆனந்த் குமாா் சிங், ம் கடலோர காவல் நிலைய ஆய்வாளா் பிரவீன் குமாா் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
ரோந்துப் படகை கடலில் இயக்கி சோதனை செய்தனா். படகின் செயல்பாடுகள் திருப்தியாக இருப்பதாக குழுவினா் தெரிவித்தனா்.