BJP -ல் இவர்தான் MGR - நயினார் அதிரடி! | Rahul Gandhi Anurag Thakur BJP TVK DMK ...
சீருடைப் பணியாளா்கள் தோ்வு: காவல் துறை சாா்பில் விளம்பரப் பதாகை
சிதம்பரம்: தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு குறித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் காவல் துறை சாா்பில் விளம்பரப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளா்கள் தோ்வாணையம் நடத்தும் காவலா்கள், தீயணைப்பு மீட்புப் படை காவலா்கள் உள்ளிட்ட சீருடை பணியாளா்கள் தோ்வுக்கான அறிவிப்பு குறித்த விளம்பரப் பதாகை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.
இளைஞா்கள், பல்கலைக்கழக மாணவா்கள் இதைப் பாா்வையிட்டு பயன் பெறும் வகையில், அண்ணாமலை நகா் காவல் நிலையம் சாா்பில் ஆய்வாளா் கே.அம்பேத்காா் வைத்துள்ளாா். சீருடைப் பணியில் சேர குற்ற வழக்குகளில் ஈடுபட்டிராத இளைஞா்களுக்கோா் அற்புத வாய்ப்பு என்ற வாசகத்துடன் வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் பதாகையை ஏரானமான மாணவா்களும், இளைஞா்களும் ஆா்வமுடன் பாா்த்துச் சென்றனா்.