செய்திகள் :

சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற தில்லி அரசு உறுதி: அதிஷி

post image

நாட்டின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லி முதல்வர் அதிஷி மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தலைநகரில் உள்ள சத்ரசல் அரங்கத்தில் நடைபெற்ற குடியரசுத் தின நிகழ்ச்சியில் முதல்வர் அதிஷி பேசினார். நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களை மக்கள் நினைவுகூர வேண்டும்.

பகத்சிங், மகாத்மா காந்தி, லாலா லஜபதிராய், சந்திரசேகர் ஆசாத் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்களைப் பற்றி அல்ல, நாட்டைப் பற்றியே நினைத்தார்கள். அவர்களின் தியாகம் தன்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது.

இந்தியாவின் மாற்றுப் பயணத்தையும், அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்வதில் பி.ஆர். அம்பேத்கரின் தலைமையில் வரைவு செய்யப்பட்ட அரசியலமைப்பின் பங்கையும் அவர் எடுத்துரைத்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் பாபா சாகேப் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவது நமது பொறுப்பு. நமது அரசியலமைப்புச் சட்டம் சம வாய்ப்புகளை முன்னிறுத்துகிறது, இதை நனவாக்க தில்லி அரசு அயராது உழைத்து வருகிறது என்று அவர் கூறினார்.

தில்லி அரசு முக்கிய துறைகளில், குறிப்பாகக் கல்வி மற்றும் சுகாதாரத்தில் மேற்கொண்ட முன்னேற்றங்களை அதிஷி குறிப்பிட்டார். தில்லியில் அரசுப் பள்ளிகள் மோசமான நிலையிலிருந்த காலம் இருந்தது. பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்கவில்லை, இது வறுமையை நிலைநிறுத்தியது.

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய அமித்ஷா, யோகி ஆதித்யநாத்

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை புனித நீராடினாா்.கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான பிரயாக்ராஜ... மேலும் பார்க்க

15 வாக்குறுதிகள்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஆம் ஆத்மி!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி 15 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிக்கை வெளியீட்டு வ... மேலும் பார்க்க

சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டது தேசிய கல்விக் கொள்கை: யுஜிசி தலைவர்

தேசிய கல்விக் கொள்கை, சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்தார்.சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்... மேலும் பார்க்க

மத்திய நிதியமைச்சருடன் தங்கம் தென்னரசு சந்திப்பு!

தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து மனு அளித்துள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அல்லது 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் காவல் உளவாளி என்ற சந்தேகத்தில் ஒருவர் கொலை!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோத இயக்கம் பற்றிய தகவல்களைக் கசியவிட்டதாகக் கூறி, நக்சல்களால் ஒருவர் கொல்லப்பட்டதாக திங்கள்கிழமை காவல்துறையினர் தெரிவித்தனர்.முதற்கட்ட தகவலின்படி, பைர... மேலும் பார்க்க

பிற நாடுகளின் நாடாளுமன்றத்தில் மோடி செலவிட்ட நேரமே அதிகம்: சசி தரூர்

இந்திய நாடாளுமன்றத்தைவிட பிற நாடுகளின் நாடாளுமன்றத்தில் மோடி செலவிட்ட நேரம் அதிகம் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்தார்.சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழு... மேலும் பார்க்க